பொங்கு தமிழ் தூபி மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் பெருமளவில் பொலிஸாரின் பிரசன்னம்!

45shares

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிசார் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து யாழ் நல்லூர் நினைவிடம் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் பொலிசார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் குறித்த நடைப யணம் இன்று இடம்பெறவில்லை.

இந்நிலையில் இன்று காலை முதல் பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இது குறித்து பொலிசாரிடம் கேட்டபோது இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு வருகை தருவதினால் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை

பகல்கனவு காணும் கோட்டாபய அரசு - ஒருநாளும் நிறைவேறாது! சரத் பொன்சேகா சூளுரை