தற்கொலைக்கு முயன்ற இளைஞன்! பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை

48shares

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்ட பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சி ஒன்றில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞன் ஒருவனை ஹட்டன் பொலிஸார் காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வட்டவலை ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தமது வீட்டில் கூறி விட்டு வந்து குறித்த நீர்வீழ்ச்சியின் மேல் ஏறி பாய்வதற்கு முயற்சித்த இளைஞனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் நான்கு பக்கமும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் தெரிவித்துள்ளனர்.

மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞனை ஹட்டன் பொலிஸார் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, குறித்த இளைஞன் மனநோயினால் பாதிக்கபட்டவரா என அறிந்து கொள்ள நீதிமன்ற அனுமதியினை நாட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்