பாடசாலையில் களேபரம் ஏற்படுத்திய விஷமிகள்: நுழைவாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

166shares

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களால் பாடசாலை நுழைவாயினை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் நேற்றையதினம் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இரண்டு மாணவர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த மாணவன் உருவரின் தலையில் காயம் ஏற்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து காயமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலைக்கு வருகை தந்து மாணவனின் வகுப்பாசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குறித்த ஆசிரியரை தாக்க முற்பட்டுள்ளனர். அவ்விடத்திற்கு வருகைதந்த பிரதி அதிபர் நிலைமையை கேட்டறிய முனைந்த வேளையில் அவரையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து பாடசாலை நிருவாகத்தினரால் நேற்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பின்னர் நேற்று இரவு குறித்த நபர்களால் பாடசாலையின் விளம்பர பலகைகள், கடிகாரம், பூச்சட்டிகள், அதிபர் பெயர் பலகை, கதவு, தண்ணீர் குழாய்கள் என பாடசாலைச் சொத்துக்களை அடித்துச் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த பெற்றோர் பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தி ஆசிரியர்களை அவமதித்த குறித்த நபர்களை கைது செய்ய கோரி பாடசாலை நுழைவாயிலினை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பொலிஸார் மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.அஹ்சாப் ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.

சேதத்தை ஏற்படுத்திய ஏனையவர்களையும் கைது செய்வதாக உறுதி வழங்கியதையடுத்து பாடசாலை நுழைவாயில் பெற்றோர்களால் திறக்கப்பட்டதுடன், பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து சென்றமையால் பாடசாலை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை