ஸ்ரீலங்காவில் மீண்டும் கொரோ தொற்று ஏற்படுவது தொடர்பில் வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

51shares

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சர்வதேச நாடுகளில் இந்த தொற்று தொடர்ந்தும் பரவிவருவதால் மீண்டும் ஸ்ரீலங்காவில் அவ்வாறான நிலைமை ஏற்படாது என்று கூறமுடியாதென தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்த அவர், மிகவிரைவில் அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றைய தினம் கோவிட்-19 தொடர்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கோவிட் 19 வைரஸானது சமூகங்களிடையே பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறுள்ளது. வெளிநாடுகளிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு வருபவர்களே தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுகின்றனர்.

எனினும் ஆரம்ப கட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சிலருக்கு இரண்டாவது பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே வெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு அழைத்து வரப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் சமூகங்களிடையே தொற்று பரவலை எம்மால் தடுக்க முடிந்தது. எனினும் தற்போது மக்கள் வழமையான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்நாட்டு போக்குவரத்துகளும் வழமைக்கு திரும்பியுள்ளன. அதனால் மக்கள் மத்தியில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் போயுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படாமையேதொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாகும். சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் கூட மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளன.

ஸ்ரீலங்கா பிரஜைகள் 50,000 இற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இன்னும் சிக்கியுள்ளனர். விசா இல்லாமை போன்ற பிரச்சினைகளால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாட்டில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டுக்கு அழைத்து வரப்படும் அனைவரையுமே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் போது கொவிட் பரவல் ஏற்படாது தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்