கூட்டமைப்பின் அலுவலகத்திலோ வேறு பிரதேசங்களிலோ நினைவேந்தலுக்கு தடை! ஸ்ரீதரனுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை

35shares

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகத்திற்கு சென்றிருந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15.9.2020 தொடக்கம் 28.09.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வையும் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கட்டளையை இன்று பகல் 11.30 மணியளவில் வழங்கியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்