மன்னாரில் கொரோனா பரவலா? வைத்தியர் விளக்கம்

42shares

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட புகையிரத ஊழியர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர், தப்பியோடிய நிலையில் மன்னார் ரயில் நிலையத்தில் தலைமைறைவாகியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபரை பிடிப்பதற்காக உதவிய மூன்று ரயில்வே பணியாளர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

இந்த நிலையிலேயே, பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?