மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை - ஐ.நா சபையில் இலங்கை அரசாங்கம்

49shares

20ஆவது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது அமர்வில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் நேற்று இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஒரு முழுமையான ஜனநாயக வழிமுறையைத் தொடர்ந்து விவாதிக்கப்படும். அங்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும், இவ்வாண்டு பெப்ரவரியில் இலங்கையின் 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியதால் புதிய அரசாங்கம் ஐ.நா சபைக்கு அளித்த உத்தரவாதங்கள் குறித்து உறுதியுடன் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு கடந்த மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் முக்கிய சிவில் திணைக்களங்களில் நியமிக்கப்படுதல் போன்றவை குறித்தும் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மூத்த இராணுவ அதிகாரிகள் அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக இலங்கை இது குறித்து பதிலளித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி