ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கத் தயார் என அறிவித்திருந்த நிலையில் அது கைகூடாமல் போன நிலையில் கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள தனது அலுவலகத்தை மீளக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் பிரததி தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவாகிய நிலையில் நவீன் திஸநாயக்க அதிருப்திக்குள்ளாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் கட்சித் தலைமையகத்திற்கு நேற்று மாலை சென்ற அவர் அங்கிருந்த தனது அலுவலகத்திலுள்ள காகிதாதிகளை அகற்றிய அதேவேளை, பொறுப்புக்கள், சொத்துக்களை தலைமை நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
You May Like This Video