இலங்கையின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படாது? - வெளிவந்த புதிய தகவல்

876shares

இலங்கை குடிமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை சுகாதார அதிகாரிகள் நற்சான்றளிக்கும் வரை இலங்கையின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க கூறியுள்ளார்.

கம்பஹா பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டிற்குள் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முறையான திட்டம் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், 2 மில்லியன் மக்கள் வாழும் நாட்டின் சுகாதார பாதுகாப்பு குறித்து 100 சதவீதம் உத்தரவாதம் கிடைத்தவுடன் மட்டுமே விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் இந்த விஷயத்தில் வழிகாட்டுதல்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் நபர்கள் குறித்து இலங்கை கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்