தம்பதியினரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

75shares

நாட்டின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையம் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டுள்ள தம்பதியினரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு - தெமட்டகொட உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்றுவந்த தங்க நகை மோசடிகள் தொடர்பில் இளம் தம்பதியினர் அடையாளம் காணப்படுள்ளதுடன், இவர்கள் இருவரும் பெயர் பதிவுச் செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மீரிகம இம்புலான பகுதியைச் சேர்ந்த அப்புஹாமிலாகே சுதர்ம சந்தருவன் எனப்படும் அசேல சந்தருவன் மற்றும் கட்டானை - மீரிகம பகுதியைச் சேர்ந்த சமரகோன் ராளலாகே தில்ஹானி குமாரி எனப்படும் இருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 126/2014 என்ற இலக்கத்தில் குற்றவாளிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன். குருணாகலை, மீரிகம உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பல்வேறு கொள்ளைசம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் தொடர்பில் சி.சி.டி.வி காணொளி காட்சி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அந்த காணொளியில் தெரியும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?