2024 இல் பூர்த்தி செய்யுங்கள் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்த கோட்டாபய

75shares

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை 2024 ம் ஆண்டில் நிறைவு செய்து அதனை பிரதான வீதித் தொகுதியுடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இலகுவாகவும் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்துகொள்வது நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் காணப்படுகின்ற உரிமை என இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

போக்குவரத்து தொகுதியின் இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகளை பூர்த்தி செய்து செயற்திறன் மிக்க உயர்ந்த தரத்திலான வீதி தொகுதியொன்று அறிமுகப்படுத்தப்படுமென சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

நாடு பூராகவும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் குறுக்கு வீதிகளின் நிர்மாணப் பணிகள் சூழலுக்கு ஏற்ற முறையில் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சிறிய பாலங்கள் மற்றும் கயிற்றுப் பாலங்கள் போன்றவற்றிற்கு பதிலாக புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்படவேண்டும். கடந்த ஒரு சில மாதங்களுக்குள் 8 ஆயிரம் கிலோ மீற்றர் வீதியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 400 கிலோ மீற்றர் நிர்மாண பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

வீதி நிர்மாணப் பணிகளுக்கென பயன்படுத்தப்படுகின்ற மண், கல் மற்றும் மணல் போன்றன வற்றை தேவையான அளவில் வழங்கும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். வளங்கலை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய சுற்றாடல் வனஜீவராசிகள் வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் உள்ளிட்ட சகல நிறுவனங்களும் மாவட்ட ரீதியில் கூடி அதற்கு அங்கீகாரத்தை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிரதான வீதிகளின் இருமருங்கிலும் இரண்டு மில்லியன் கன்றுகளை நடுவதற்கும் இப்பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டது. வீதி நிர்மாணப்பணிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அரச மற்றும் ஒப்பந்தகாரர்கள் ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட வேண்டும். முகவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சகல பிரதான வீதிகளினதும் இருமருங்களில் உள்ள நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்திவைப்பது முற்று முழுதாக தடை செய்யப்படவேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?