இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்கள்! விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

870shares

வீட்டு வேலைகளுக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதிர்காலத்தில் பெண்களை கௌரவமான தொழில்களை செய்யும் வகையில் வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹாலிஎலவில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் அங்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை பார்வையிட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

வீட்டு வேலைகளுக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கிறோம். அவர்களை மரியாதைக்குரிய வேலைகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. .

பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களை அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் விசேட வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும்.

வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரிந்து அனுப்பப்படும் பணத்தை சிலர் அனுபவித்து வாழ்கின்றனர்.

எனவே, வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களை கௌரவமான வேலைகளுக்காக வழிநடத்துவதில், பயிற்சியை விட சிறந்த மொழி மற்றும் நடைமுறை பயிற்சி அளிக்க வேண்டும்.

ஜப்பானில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்