வாக்குறுதிகளை வழங்கினாரா ரணில்?

36shares

ஐக்கிய தேசிய கட்சி என்பது எவருடைய தனிப்பட்ட சொத்து இல்லை என்று ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் அடுத்த தலைவர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் விளக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக என்னை தவிர வேறு ஒருவர் வருவதற்கான வாய்ப்புள்ளது. எமது கட்சி என்பது எவருடைய தனிப்பட்ட சொத்தில்லை.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எனக்கு தலைமைத்துவத்தை வழங்கப்போவதாக உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை.

தற்போதைய பிரதி தலைவரே கட்சியின் தலைவராக வரவேண்டும் என கட்டாயம் எதுவுமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை பிரதிதலைவர் தலைவராக வருவதற்கான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை என்று ரணில் கூறியதாக ருவான் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

என்னை தவிர ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக வேறு ஒருவர் வருவதற்கான இடமுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஒரு குடும்பத்துடனோ அல்லது ஓரிருவருடனோ மட்டுப்படுத்தப்பட்ட கட்சியில்லை.

ரணில் விக்ரமசிங்க எனது உறவினர் என்றபோதிலும் நான் பிரதிதலைவராக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு புதிய தலைவரை தெரிவு செய்யும், கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் நான் தலைமை பதவிக்கு போட்டியிடுவேன், பலர் போட்டியிட்டால் இரகசிய வாக்கெடுப்பு தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்