அங்கொட லொக்காவின் மரணத்தில் திருப்பம்! வெளியானது அறிக்கை

58shares

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் தமிழகம் கோயமம்புத்தூரில் வசித்து வந்த இலங்கையின் பாதாள உலக முக்கியஸ்தரான லசந்த சந்தன பெரேரா என்று அழைக்கப்படும் அங்கொட லொக்கா மாரடைப்பு காரணமாகவே இறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அவரது மரணத்தில் எந்தவிதமான காரணங்களும் இல்லை என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக இந்திய காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையை தவிர வேறு சோதனைகளிலும் மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

ஏற்கனவே லொக்காவுடன் வசித்து வந்த இலங்கை பெண்ணான அமானி தாஞ்சி என்ற இலங்கை பெண் லொக்காவுக்கு நஞ்சூட்டி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன

எனினும் 2020, ஜூலை 3 ஆம் திகதி இரவு அவருக்கு இருதய நோ ஏற்பட்டதாகவும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்;த நிலையில் அவர் அங்கு மரணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது அங்கொட லொக்கா பிரதீப் சிங் பெயரில் ஒரு ஆதார் அட்டை வைத்திருந்தார்,

அதனை அவர்; மதுரையின் சட்டத்தரணியான டி.சிவகமசுந்தரி மற்றும் ஈரோடைச் சேர்ந்த அவரது நண்பர் எஸ்.தயனேஸ்வரன் ஆகியோரின் உதவியுடன் பெற முடிந்துள்ளது.

இந்தநிலையில் லொக்கா இறந்தவுடன் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் மற்றும் தாஞ்சி ஆகியோர் ஜூலை 5 ஆம் திகதி, பிரேத பரிசோதனைக்குப் பிறகு லொக்காவின் உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று அங்கு தகனம் செய்தனர்.

இதற்கு மத்தியில் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் லொக்காவின் ஆதார் அட்டை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டமை தெரியவந்தமையை அடுத்து லொக்காவுடன் தங்கியிருந்த இலங்கைப் பெண்ணும் மதுரை சட்டத்தரணி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அவரது நண்பர் ஆகியோர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி தமிழக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?