யாழ்ப்பாணத்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்! ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி

489shares

யாழ். சங்கானைப்பகுதியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் முகவர் நிலையம் ஒன்றின் மூலம் யாழ். குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடியே 71 இலட்சம் (37, 180, 999) ரூபா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் சங்கானை பிரதான வீதியில் A.M.சகீஜன் என்பவர் விற்பனை செய்த மஹஜன சம்பத லொத்தர் சீட்டின் மூலமே மேற்படி பாரிய தொகை வெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லொத்தர் விற்பனை முகவர் நிலையத்தின் உரிமையாளர் த.சகீஜன் தெரிவிக்கைகையில்,

எனது விற்பனை மூலம் 3 கோடி 71 இலட்சம் ரூபா வெல்லப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

எங்கள் விற்பனை நிலையம் மூலம் எட்டு இலட்சாதிபதிகள் ஏற்கனவே உருவாகியுள்ளனர்.

இந்த வருடம் மாசி மாதம் 29ஆம் திகதி இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஐந்து இலட்சம் ரூபாவை வென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சங்கானையில் வேறொரு முகவர் ஊடாக விற்பனை செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டெழுப்பில் 3.8 கோடி ரூபா வெல்லப்பட்டதுடன், கடந்த வருடம் சாவகச்சேரியில் ஆறு கோடி ரூபா வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய