அறிமுகமாகியது இலத்திரனியல் அட்டை - ஸ்ரீலங்காவில் முதல் முதலாக....

211shares

ஸ்ரீலங்காவில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்றையதினம் காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.

கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் உள்ளடக்கி இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின் பொதுமக்களிற்கு குறித்த இலத்திரனியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய