வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!

964shares

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய இன்று முற்பகல் 10 மணியவில் அவர்கள் அங்கு முன்னிலையாகியிருநட்தனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கி வருகின்றனர்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் குறித்த ஆiணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய