நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

415shares

மாகாணசபை முறைமையை ஒழித்துக்கட்டவேண்டுமென தான் ஒருபோதும் கூறவில்லையென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்தியாவின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தசட்டத்தை எதிர்ப்பதாகவே நான் தெரிவித்து வருகின்றேன்.அதேநேரம் மாகாண சபைகள் அரசியல் உள்நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டன.

அமைச்சுப்பொறுப்பை ஏற்றதிலிருந்து எனது கருத்து 13 ஆவது திருத்தச்சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதுதான்.

நான் ஒருபோதும் மாகாண சபைகளை ஒழித்துக்கட்டுமாறு கூறவே இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையாக விமர்சித்து வரும் ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவை பேச்சு நடத்த வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்