உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

705shares

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உறுதிமொழி அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அழைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன .

இதன்படி ஓய்வூதியத்தை அளித்தல் அத்துடன் அவர் விரும்பும் நாட்டில் தூதுவராக நியமித்தல் என்பனவே அவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலரின் இந்த வாக்குமூலம் மைத்திரிபாலவிற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய