முகமாலையில் முன்னரங்காக இருந்த இடத்தில் விடுதலைப்புலிகளின் சீருடைகள்! தொடரும் அகழ்வு

27shares

முகமாலை முன்னரங்க பகுதியில் இருந்து எலும்புக் கூடுகள், தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகள், சயனைட் குப்பிகள், இலக்கத் தகடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்னதாக கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுதும் சீருடைகள் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட நிலையில் பல கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மீளவும் அகழ்வு பணி இடம்பெற்றிருந்த நிலையில் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட மண்டையோடு, எலும்புக் கூடு, விடுதலைப்புலிகளின் சீருடை என்பன சோதியா படையணியினுடையது என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இலக்கத் தகடுகள், விடுதலைப்புலிகளின் தலைவரது படம், சயினைட் குப்பி, கைக்குண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்