மீளவும் மோதவுள்ள பெருந்தலைகள் -அம்பலத்துக்கு வரவுள்ள உண்மைகள்

192shares

ஸ்ரீலங்காவில் இடம் பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் பல முக்கியமான விடயங்களை வெளியிட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரையும் முறையே ஒக்டோபர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் பிரதமர் அமரர் பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஒருசில சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, ஈஸ்டர் தாக்குதல் குறித்த முக்கிய தகவல்களை அம்பலப்படுத்தப் போவதாக கூறியிருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஒக்டோபர் 6ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, பல இரகசியங்களைப் வெளிப்படுத்தவுள்ளார் என்றும் சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரின் வாக்கு மூலங்களும் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முக்கிய மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவரலாம் என தெரிவிக்கப்படுகிறது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி