திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிரான வழக்குகளில் சுமந்திரன் ஏன் கலந்துகொள்ளவில்லை?

77shares

திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிரான வழக்குகளில் இம்முறை நான் முன்னிலையாகவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவேந்தலை நடத்தக் கூடாதென யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 20 பேரில் யாரும் என்னை முன்னிலையாகும் படி கோரவில்லை.

வழக்கொன்றில் முன்னிலையாகுவதெனில் அந்த தரப்பினர் சட்டத்தரணியை அணுக வேண்டும்.

கடந்த முறை யாழ் மாநகரசபை முதல்வர் ஆனல்ட் என்னை தொடர்பு கொண்டு முன்னிலையாகும்படி கேட்டுக் கொண்டார். அதனால் முன்னிலையானேன். நினைவேந்தலிற்கு நீதிமன்றம் அனுமதித்தது. அதற்கடுத்த முறையும் அனுமதித்தது.

இதே நீதிமன்றம்தான் நினைவேந்தலிற்கு அனுமதியளித்தது. அந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தாலே நினைவேந்தலிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, என்னை ஆனல்ட் அணுகினார். ஆனால், அனைத்தும் முடிந்த பின்னரே அவர் அணுகினார். அதனால் பலனிருக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்க வேண்டுமென மக்கள் தன்னெழுச்சியாக விரும்பியிருந்தனர்.

ஆனால்,திலீபன் நினைவேந்தலை நடத்த வேண்டுமென அப்படியானளவு உணர்வு தமிழ் மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை. சில அரசியல் கட்சிகள் அதை ஒழுங்கு செய்கிறார்கள்.

ஆனால், நினவேந்தலை செய்யும் உரிமை தமக்கு இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். யாராவது நினைவேந்தலை ஒழுங்கமைத்தால் மக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!