யுத்த காலத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி மனம் திறந்த விமானப்படை தளபதி

992shares

யுத்த காலத்தில் இடம்பெற்ற ஒருசில சம்பவங்கள் மறக்க முடியாதவை என இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் தெரிவித்துள்ளார்.

1992 இல் முகாம் ஒன்றில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு மீள்விநியோகப் பொருட்ளை நான் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அடிப்படை விநியோகப் பொருட்களையும் மருந்து வகைகளையும் கொண்டு செல்ல இரண்டு ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

அச்சமயம் முகாம் முற்றுகையிடப்பட்டது. இரண்டு ஹெலிகொப்டர்களில் ஒன்று அநுராதபுரத்திலும் மற்றையது கட்டுநாயக்காவில் இருந்தும் செல்லவிருந்தன.

கட்டுநாயக்கவில் இருந்து சென்ற ஹெலிகொப்டருக்கு நான் பொறுப்பாக இருந்தேன். திட்டப்படி நாம் கொழும்பு சென்று விநியோகப் பொருட்களை இறக்கி விட்டு காயமுற்றவர்களை ஏற்றி வர வேண்டியிருந்தது.

அநுராதபுரத்தில் இருந்து ஹெலிகொப்டரை ஓட்டி வந்தவருக்கு அந்நிலப் பகுதி பரிச்சயமாக இருந்ததால் அவரை முதலில் தரையிறங்குமாறு கூறப்பட்டது.

அவர் அங்கு சென்று திரும்பும் போது வானில் அவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. முகாமின் நிலை பற்றி அவரிடம் கேட்ட போது தீவரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு சுற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் அவரது ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அவர் தெய்வாதீனமாக தப்பி விட்டதாக கூறினார். ஆகவே நான் தொடர்ந்து பயணித்தேன்.

ஆனால் இறக்கவிருந்த போது எனது ஹெலிகொப்டர் மீதும் தாக்குதல் நடந்தது. இருந்தும் என்னால் பாதுகாப்பாக அநுராதபுரத்துக்கு திரும்ப முடிந்தது. இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்றார்..

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய