முழுமையான பாதுகாப்பில் ஸ்ரீலங்கா! அனைவரையும் விரைவில் கைது செய்வோம் - பிரதமர் மஹிந்த உறுதி

1168shares

ஸ்ரீலங்காவில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகப் பிரதானிகள் பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.

இதன்போது, வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய பிரதமர் மஹிந்த,

நாட்டின் பாதுகாப்பு எவ்வகையிலும் இது அச்சுறுத்தலாக அமையவில்லை என்று குறிப்பிட்ட அவர், எமது நாடு முழுமையான பாதுகாப்பின் கீழ் இருக்கிறது.

நாட்டில் எந்தவிதமான வன்முறைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், முழுமையான பாதுகாப்பு விடயத்தை தாங்கள் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு கொண்டு வந்தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படலாம் என்று குறிப்பிட்ட பிரதமர், 20ஆவது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் வருவதனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனினும், அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மக்களின் முழுமையான ஆணை கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், முழுமையான புதிய அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போதைப் பொருள் கடத்தல்காரர்களை முற்றாக அழிப்பதாகவும் அவர்களை விரைவில் கைது செய்வோம் என்றும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி