மோடியுடன் பேசியவை ஞாபகத்தில் இல்லை! மஹிந்த கொடுத்த பதில்

330shares

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய சில விடயங்கள் தனக்கு ஞாபகத்தில் இல்லை என்று ஸ்ரீலங்காப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஊடகப் பிரதானிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவித்தார்.

எனினும் தாம் மோடியுடன் இது குறித்து பேசிய விடயங்கள் நினைவில் இல்லை எனவும் நகைச்சுவையாக பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஞ்சள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படாது என்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நானே பிரதமர், எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதேநேரம் 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரம் குறையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம்  -ரசிகர்கள் பாராட்டு

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ