அகால மரணங்களை தவிர்க்க நான்கு விடயங்கள் -சுகாதார அமைச்சு அறிவுறுத்து

471shares

ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மரணங்களில் மூன்றில் இரண்டு இருதய நோய் காரணமாக ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அகால மரணங்களை தவிர்க்க நான்கு விடயங்களை பின்பற்றி வந்தாலே போதுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர்களில் ஒருவர் அது தொடர்பான அறிவை பெற்றிருப்பதில்லையென சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இருதய நோய்களுக்கு நான்கு விடயங்களே காரணமென இனங்காணப்பட்டுள்ளது.

புகையிலை பாவனை, மதுபானம், ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உணவு செயற்பாடு இன்மையே குறித்த காரணிகளாகும்.

குறித்த விடயங்களை கவனத்திற்கொள்வதன் ஊடாக இதய நோய்கள் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் 80 வீத அகால மரணங்களை தவிர்க்க முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக இருதய தினம் இன்றாகும். இருதய நோய்களை தோற்கடிக்க இதயங்களை பயன்படுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் இம்முறை இருதய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம்  -ரசிகர்கள் பாராட்டு

திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ

பொம்பியோ இலங்கையில் இருந்தவேளை காணாமற்போன கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ