தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

174shares

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சுற்றுச்சூழல் அழிவு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, காடுகளுக்கு தீ வைக்கப்படுவதாகவும், காடழிப்பு நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி தவறான அறிக்கைகள் வெளியிடப்படுவதாகக் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற அளவிலான காடழிப்பு இதற்கு முன்னர் நடந்ததில்லை என்பதையும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு முகங்கொடுத்து அரசாங்கம் அமைதியாக இருப்பதாகவும் இந்த ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் அது மேலும் கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் இத்தகைய அறிக்கைகள் புனையப்பட்டவை மற்றும் தவறான தகவல்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய