மலையக மக்களுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

42shares

தோட்டப்புற வீடமைப்பு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு அம்மக்கள் தற்போது வசிக்கும் லயன் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலேயே வீடுகளை நிர்மாணித்து வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் கலந்துரையாடியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகளிலும் விசேட கவனம் இராஜாங்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ள விசேட பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள வேலைத் திட்டங்களுக்கு சம காலத்தில் தனியார் தோட்ட நிறுவனங்களும் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் தோட்டப்புற மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பமானது. அத்திட்டத்தில் இதுவரை 669 வீடுகளே நிரமாணிக்கப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் இடம்பெற்றுள்ள சிக்கல்களே நிர்மாணிப்பணிகள் தாமதமாவதற்கு காரணமென இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

தோட்டப்புற மக்கள் வசிக்கும் லயன் வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால்அதனை அண்டிய பகுதிகளிலேயே வீடுகளை நிர்மாணித்தால்அதன் பிரதி பலன்களை அம்மக்கள் விரைவிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் வசிக்கும் சூழலிலேயே அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஒப்படைக்கவும் நிர்மாணப்பணிகள் தரம் வாய்ந்தவையாக உயர் தரத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு சுகாதாரம், கல்வி, விவசாயம், வீடமைப்பு, விளையாட்டு உள்ளிட்ட அமைச்சுக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

.

தோட்டப்புறங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் NVQ தரத்திலான சான்றிதழைப்பெற்றுக் கொள்ளும் வகையில் தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

தோட்டப் புறங்களிலுள்ள 438 மருத்துவ நிலையங்களையும் அரசாங்கத்துக்கு சுவீகரித்து சிறந்த சேவைகளை அம் மக்களுக்கு வழங்குவதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டாரவளை, ஹற்றன், எல்ல பிரதேசங்களை மையமாகக்கொண்டு சுற்றுலாத்துறையை முன்னேற்றுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்