'ரிஷாட் பதியூதீன் பயங்கரவாதி அல்லர் சிறுபான்மை மக்களின் தலைவர்' போராட்டத்தில் குதித்த மக்கள்!

65shares

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று தமது ஜூம்ஆத் தொழுகையினை முடித்துக் கொண்டு நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்த போராட்டத்தினை முனனெடுத்துள்ளனர்.

புத்தளம் பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொதுஅமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது 20ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்பனவற்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன்போது 'ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதி அல்ல. அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்', 'சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே', 'சஜித்தை ஆதரித்தது குற்றமா?', 'சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 20 ஆவது சீர்திருதத்தம் எமக்கு வேண்டாம்' உள்ளிட்ட வாசகஙங்களை மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமல் ஆக்கி சர்வதிகார போக்குடைய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கே 20ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்டவையும் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஒரு தனிமனிதனுடைய கரங்களில் அதிகாரங்களை சென்றடைவதற்கும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் துணைபோக மாட்டோம்.

20ஆவது அரசியல் சீர்திருத்ததிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புத்தளம் தலைமையக பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும், பொலிஸ், இராணுவ மற்றும் விமானப்படை இரகசியப் பிரிவினரும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து