முஸ்லிம் அமைச்சர்கள் அத்தனை பேரும் ஒரே நாளில் பதவி விலகியதன் பின்னணி என்ன?

482shares

நல்லாட்சி அரசில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒரே நாளில் பதவி விலகியது ரிசாத்தை பாதுகாக்க அல்ல என்றும், ரணில் தலைமையிலான அரசை காப்பாற்றவே அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் இந்த சாட்சியத்தை வழங்கினார். இதன்போது பேசிய அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது, ஆனால் அது உண்மையில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிரானது" என்று கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியினரும் வாக்களித்திருந்தால், அது முழு அரசாங்கத்தை மாத்திரமல்ல. அந்த நேரத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதித்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் விளக்கினார்.

இந்த நிலைமையை முன்னாள் பிரதமர் ரணில்; விக்ரமசிங்கவிடம் தெளிவுப்படுத்தியதாக குறிப்பிட்ட கபீர் ஹாசிம், அமைச்சர் பதியுதீன் பதவி விலக விரும்பவில்லை. எனவேதான் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினார்.

அதாவது, நல்லாட்சி அரசாங்கத்தில் பணியாற்றிய முஸ்லிம் அமைச்சர்கள அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வந்த

நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பதவி விலகினர். அந்த நடவடிக்கை, அவரைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டது என்றார்.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்