எனது கைகள் கட்டப்பட்டுள்ளன! ஓராண்டு நிறைவுக்குள் முடித்து வைப்பேன் - ஜனாதிபதி கோட்டாபய சபதம்

676shares

தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்யமுடியாது என்றும் கூடிய விரைவில் 20ஆவது திருத்த யோசனையை நிறைவேற்றிவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற 20ஆவது திருத்த யோசனை மற்றும் புதிய அரசியலமைப்புப் பணிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தத்தினால் எனது கைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் 20ஆவது திருத்த யோசனையை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும்.

அராஜகத்தை எதிர்க்கின்ற, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசியலமைப்பு தான் தேவையாக இருக்கிறது.

இரண்டாவது பதவியாண்டு ஆரம்பிக்கும் முன்னர் புதிய அரசியலமைப்பினை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

இதேவேளை 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்த யோசனை மீது விவாதம் நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்