செயலணியில் பெண்களுக்கு இடமில்லை - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

37shares

இலங்கையில் பெரும்பான்மையாக பெண்கள் பணியாற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, கொரோனா தொற்று தலைத்தூக்கிய சந்தர்ப்பத்தில் அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய செயலணியில் பெண் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படவில்லை இல்லை என தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சுதந்திர முதலீட்டு வலய ஊழியர் சங்கம் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இக்குழுவானது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்களால் உருவானது. அந்த செயலணியில் பெண்களுக்கு தனித்தனி பிரதிநிதித்துவம் இல்லை.

முதலாளிகளின் சங்கங்கங்களைப் போல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதைப் புதுப்பிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஊரடங்கு காலத்திலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டது. 14 தொழிற்சங்கங்களில் 4 தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மத்திய கிழக்குத் தொழிலாளர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் சுதந்திர வர்த்தக வலய ஆடைத் தொழிலாளர்கள், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்து இரண்டாம் தர குடிமக்களாக ஊடகங்களால் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர்.

பிரெண்டிக்ஸில் வைரஸ் பரவுவது குறித்து சுயாதீன விசாரணையை நடத்துவதாக பிரெண்டிக்ஸ் தலைவர் கூறிய விடயத்தை நான் நிராகரிக்கிறேன்.

இந்த சுயாதீன விசாரணையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் இல்லாததால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

பின்னர் இந்த தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பல பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுக்கு விடுமுறை கூட வழங்கப்படவில்லை.

தொழிலாளர் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் எதிர்வரும் சுயாதீன விசாரணையை பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்.

பிரெண்டிக்ஸின் உயர் அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அதே நிறுவனத்தின் தொழிலாளர்கள் அசுத்தமான, வசதிகள் இல்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டு பாராபட்சம் காட்டப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் குடிமக்களிடம் பாகுபாடு காட்டாதீர்கள். அந்நிய செலாவணியை சம்பாதித்த இந்நாட்டின் பெண்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பாகும். எனவே பெண் தொழிலாளர் விடயத்தில் இதுபோன்ற பாகுபாடு காட்ட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்