20இல் குறையிருந்தால் திருத்தலாம் கைவிடமுடியாது: அமைச்சர் வலியுறுத்தல்

10shares

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யப்படும் ஒருபோதும் அந்நடவடிக்கையை கைவிடமுடியாது என அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷதீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – டயகம பகுதியில் இன்று நடைபெற்ற வீதிபுனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

19 ஆவது திருத்தச்சட்டமூலம் இல்லாதொழிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் போது அறிவிக்கப்பட்டது. தற்போது அதனைசெய்ய முற்படும்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 20இல் குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம். ஆனால், அந்நடவடிக்கையை கைவிடமுடியாது.

20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறிய பின்னர், நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்று இயற்றப்படும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அப்பணி நிறைவுசெய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் பதியூதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும்.

எவராவது தவறிழைத்திருந்தால் தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்