தலைமறைவாகிய ரிஷாட் விவகாரம் - பாதுகாப்பு செயலர் வெளியிட்டுள்ள தகவல்

229shares

ரிஷாட் பதியூதீனுக்கு எந்தக் கருணையும் தாங்கள் காட்டப்போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மக்களின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், இந்தக் கைதுகளை மேற்கொள்வதில் பொலிஸார் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறை உள்ளது.

இவரைக் கைதுசெய்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு சிறிது காலம் அவகாசம் தேவைப்படுகிறது.

ரிஷாட் பதியூதீனிடம் இருந்து வாக்குமூலம ஒன்றினை பெற்றுக்கொண்டு அவரை சி.ஐ.டி. யினர் கைது செய்ய திட்டமிட்டிருந்த போதும் துரதிர்ஷ்டவசமாக அவர் தலைமறைவாகி விட்டார்.

இப்போது அவரது சட்டத்தரணிகள் ரிட் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். எவ்வாறாயினும் ரிஷாட் பதியூதீன் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் உறுதியளித்தார்.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து