தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இருதய நோயாளியான பெண்ணுக்கு கொரோனா

52shares

குலியாபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 15 மற்றும் 11 ஆகிய இரண்டு வார்டுகளையும், அந்த பெண் தற்போது தங்கியிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவையும் மூட மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குலியாபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய நோயாளிகளின் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என 43 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவரது உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவில் 14 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்