இலங்கையில் ஏற்படும் உயிரிழப்பு - சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

65shares

கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று சனிக்கிழமை காலை அவர் அளித்த நேர்காணலில் இந்த எச்சரிக்கையுடன் கூடிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டிருக்கும் அவர்,

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களாக இருந்தால் உயிரிழப்புக்கள் நேரிடுவது இல்லை என்ற போதிலும் வயோதிபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தொற்று ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் உயிரிழப்புக்கள் பதிவாகலாம்.

“கடந்த காலங்களில் கந்தக்காடு மற்றும் வெலிசற கடற்படை முகாமில் தொற்று ஏற்பட்ட அநேகர் இளைஞர்கள் அல்லது வயோதிப வயதெல்லையை அண்மிக்கின்றவர்களாக இருந்தபடியினால் தொற்று குணமடைந்தது. உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை.

எனினும் எதிர்காலத்தில் வயோதிபர்களுக்கு இந்த தொற்று தீவிரமாகப் பரவினால் உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்