குவைத்தில் இலங்கை பணிப் பெண்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி

23shares

குவைத்தில் உள்ள வீடுகளில் நீண்ட காலமாக பணியாற்றும் பணிப்பெண்கள் 160 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

ஆகவே தற்போதைய சூழலில் அங்குள்ள பாதுகாப்பு வீட்டில் தங்குமிட வசதி போதாமையால் இனிமேல் வீட்டுப் பணிப்பெண்ணைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.

எனவே குவைத்தில் உள்ள தமது நிறுவனத்திற்கு கடமைகளுக்காக வருவதைத் தவிர்க்குமாறு இலங்கைக்கான குவைத் தூதரகம் அங்குள்ள பணிப்பெண்களை கேட்டுள்ளது.

ஆனால் தூதரகத்தை அழைத்தோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டோ தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என குவைத் தூதரகம் கேட்டுள்ளது.

எனினும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நாளை (18) முதல் அவசர சேவைகளுக்காக மாத்திரம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்