முடக்கப்படுமா இலங்கை? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அபாய மணி

192shares

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடு முடக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஹரித அளுத்கே, தற்போதைய செயல்முறை திருப்திகரமாக இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் முடக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுகள் ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்படாவிட்டால், அவற்றை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வைரஸ் பரவுவதை தவிர்க்க இயலாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவு இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்