இலங்கை முழுவதும் 20 தற்கொலை தாக்குதல்களை நடத்ததிட்டம்?

163shares

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழு நாடு முழுவதும் 20 தற்கொலைத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

20 தற்கொலைப் குண்டுதாரிகளை கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் தாக்குதல்களின் பின்னர் மூன்று கட்டங்களாக தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதி சஹ்ரான் குழுவில் உள்ள ஒருவரிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த இயக்கத்தின் தலைமைப் பதவி தொடர்பில் சஹ்ரானுக்கும் நவுபர் மௌலவி என்பவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்