தமிழ் கட்சிகளுடன் இணைவா? செல்வம் அடைக்கலநாதனுடனான சந்திப்பு தொடர்பில் மனம் திறந்த டக்ளஸ்

149shares

எம்மோடு இணைந்து பயணிக்க முன்வரும் தரப்புகளை அரவணைத்து பயணிக்க நாம் தயாராகவே இருக்கின்றேம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிலித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பாதையில் பயணிக்கும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து மாகாணசபைத் தேர்தல்களில் கூட்டு சாத்தியப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

காலத்துக்கு காலம் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள், முயற்சிகள் நடைபெறுகின்றன.

பெரும்பாலும் தேர்தல் நெருங்குகின்ற காலத்தில் இவ்வாறான முயற்சிகள் பரபரப்பாக இருப்பதும், தேர்தல் வேளையில் தத்தமது சுய நலன், விருப்பு, வெறுப்புக்களுக்கு இடமளித்து இந்த கூட்டுக்கான முயற்சிகள் பலவீனடைந்து விடுவதே அனுபவப் பாடமாக இருக்கின்றது.

தவிரவும் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டு ஒன்றுக்குச் செல்வதை நாம் எப்போதும் விரும்பியதில்லை. எம்மைப் பொறுத்தவரை, கூட்டு என்பது முரண்பாடுகளுக்குள் உடன்பாடுகளை காணுகின்ற அதேவேளை பொது வேலைத்திட்டம், ஒன்றுக்கான அடிப்படை இணக்கத்தோடும், அர்த்தபூர்வமானதாகவும், உண்மைத் தன்மை கொண்டதாகவும் அமைய வேண்டும்.

எம்மோடு இணைந்து பயணிக்க முன்வரும் தரப்புகளை அரவணைத்து பயணிக்க நாம் தயாராகவே இருக்கின்றேம்

மேலும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எம்.பி செல்வம் அடைக்கலநாதனுடனான சந்திப்பை அரசியல் கூட்டுக்கான சந்திப்பாகக் கொள்ளளாலமா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அது அவசரமான சந்திப்பு அல்ல. தவிரவும் நாடாளுமன்றத்தில் எப்போதும் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். நாங்கள் நீண்டகால நண்பர்கள். அந்த நண்பர்களுக்கிடையே எப்போதும் ஒரு நெருக்கம் இருக்கும்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய ஜனநாயக அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால் தோழர் செல்வம், தோழர் சித்தார்த்தன் போன்றவர்களோடும், நாடாளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களான ஜனா, வினோ போன்றவர்களுடனும் எங்களுக்குள் நெருக்கமான உறவு எப்போதும் இருக்கின்றது.என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்