திண்டாடி வரும் தொழிலாளர்கள் : ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு

49shares

கண்டி மாவட்டம் உடபலாத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுவை பிதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் பாட்டலால் தோட்டத்தில் குடியிருப்பு வசதிகள் அற்ற தொழிலாளர் குடும்பங்கள் ஐம்பது பேருக்கு அரசு ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் ஏழுபேச் காணியில் 50 வீடுகளை அமைக்க திட்டமொன்றை விடுத்தது. .

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கட்டுமான பணிகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்து.

இன்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் கட்டுமானப் பணிகள் ஐம்பது சதவீதம் கூட பூர்த்தியாகவில்லை. இது இவ்வாறிருக்க, கடந்த ஒன்றரை வருடங்களாக வீடுகட்டும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த வீடுகளை அமைத்துக் கொள்ளும் பணிகள் தொழிலாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. முழுத்தொகை ஐந்து இலட்சம் என கூறப்பட்டுள்ளது. அத்திவாரம், சுவர்கள், கூரை என்பன கட்டம் கட்டமாக அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு வேலைத் திட்டமும் தயாரிக்கப்பட்டது.

ஒரு கட்டம் நிறைவடைந்ததும் அடுத்த கட்டத்திற்கான பணம் வழங்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டது.

எனினும் தமக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பணம் வழங்கப்படவில்லை என்றும் அரைகுறையாக கட்டப்பட்ட வீட்டு சுவர்கள் கூரை அமைக்கப்படாததால் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக தமது சொந்த வீட்டு கனவை நனவாக்க முடியாமல் திண்டாடி வரும் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

வரலாற்று தவறை செய்யப் போகிறீர்களா? ஸ்ரீலங்கா வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று

ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்