தலவாக்கலையில் இடம்பெற்ற திடீர் அனர்த்தம்! எரிந்து சாம்பலாகிய கடை

12shares

தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்