பொலிஸ் காவலிலிருந்த இளைஞன் திடீர் மரணம்! பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

82shares

பூகொடை பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 08 பொலிஸ் சார்ஜென்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூகொடை பொலிஸாரினால் இம்மாதம் 11 ஆம் திகதி 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, குறித்த சந்தேநபர் சுகயீனமுற்ற நிலையில், மறுதினம் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இது தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு