விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன்: மலையக மக்களுக்கு இராஜங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகள்

11shares

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் பெற்றுத் தருவோமென அவர் உறுதியளித்துள்ளார்.

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா- ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவான வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாம் மௌனம் காக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்த தொகை பெற்றுக்கொடுக்கப்படும்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை.

அதேவேளை, பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் கலாசாரத்தையும் நாம் குறைத்துக்கொள்வோம். அரசியல்வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை குழந்தைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் கோபமடையப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா