வைத்தியசாலைகளில் நிரம்பியுள்ள கொரோனா தொற்றாளர்கள் - இடப் பற்றாக்குறையால் அபாயம்

45shares

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களுக்கான இடவசதி (படுக்கைகள்) பற்றாக்குறையாக இருப்பதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலைகளில் 2026 படுக்கைகள் நிறைந்துள்ளதாகவும் இன்னும் 49 படுக்கைகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள 19 வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்து 75 கொரோனா தொற்றாளர்கள் தங்குவதற்கான இடவசதி மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, கம்பஹா மாவட்டத்தின்

திவுலபிட்டிய , ரத்வான மற்றும் தொம்பே ஆகிய வைத்தியசாலைகள் பிரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு