தொடரும் சாதிய பாரபட்சம்- ஆலய நிர்வாகத்தினரால் மாணவனுக்கு இளைக்கப்பட்ட அநீதி!

272shares

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது ஆலய நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது.

அத்தோடு தற்போது இளைஞர்கள் கஞ்சா, கசிப்பு, வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஆலய வழிபாடுகள் மூலம் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்கப்படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது என அவ்வூர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது பிள்ளையாளர் ஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஆலய நிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு மணிக்கு நவராத்திரி பூசைஇடம்பெற்று வருகிறது. இதன்போது அங்கு செல்லும் சிறுவனின் குடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே வந்துள்ளனர்.

இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டுசென்றால் அதனை மூலஸ்தான சுவாமிக்கு அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமிக்கு அணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த பாரபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம்பாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின் தலைவர், சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில் பாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில் ஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர் தான் பாடவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலயநிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த சிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன்.

இவனது வயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில் ஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டிப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற மனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா