இது அரசியல் பழிவாங்கல் இல்லை - எவரும் தலையிடவும் முடியாது! ஜனாதிபதி கோட்டாபய ஆவேசம்

192shares

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்யும் நடவடிக்கைக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும் போது சிரிப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நேற்று முன்தினம் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ரிஷாட் பதியுதீன் மீது தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுமே சுமத்தப்பட்டுள்ளது.

அதையடுத்தே அவரைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய ரிஷாட்டைக் கைது செய்ய பொலிஸார் விரைந்த போது அவர் ஓடி மறைந்துள்ளார். அவரைத் தேடும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரிஷாட் விவகாரம் நீதித்துறை சம்பந்தப்பட்டது. இதில் எவரும் தலையிட முடியாது.

அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நாம் தீர்மானிக்க முடியாது என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து