உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -வெளிவரவுள்ள முக்கிய பல இரகசிய தகவல்கள்

54shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மிக முக்கிய ரகசிய தகவல்கள் பலவற்றை தனது சாட்சிப்பதிவின் இறுதியில் வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நேற்றைய தினம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 11 வது நாளாக வாக்குமூலம் அளித்தார். கேள்விகளை ஆரம்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயசுந்தர தாக்குதலுக்கு முன்னைய நாள் நிலந்த ஜயவர்த்தன அனுப்பிய பெயர்ப் பட்டியலில் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரோடு இணைந்து செயற்பட்டவர்கள் தொடர்பில் தகவல் தெளிவாக இருக்கின்றது தானே எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய பூஜித் ஜயசுந்தர ஆம், நான் ஏற்றுக்கொள்கின்றேன். அரச உளவுப்பிரிவு இதற்கு முன்னர் அனுப்பிய உளவுத் தகவலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் மேலதிகமாக பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. சஹ்ரான் அவருடைய சகோதரர்களான ரில்வான் மற்றும் செய்ன் ஆகியோர் தொடர்பிலும் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தொடர்புபட்ட சாதிக் மற்றும் ஷாபி தொடர்பிலும் சினமென் க்ரேண்ட் மற்றும் சங்கிரில்லா ஹோட்டல்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட இப்ராஹீம் சகோதரர்கள் தொடர்பிலும் குறித்த தகவலில் தெளிவாக காணப்பட்டது.

எனினும் என்னுள் இருக்கும் கேள்வி, இவ்வாறான பல தகவல்கள் காணப்படுகின்ற, இந்த ஆவணம், ஏன் இறுதி தருணத்தில் அனுப்பப்பட்டதென்பதாகுமென பூஜித் ஜயசுந்தர பதில் அளித்தார்.

பின்னர் கேள்வியெழுப்பிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயசுந்தர இது இவ்வளவு முக்கியமான உளவுத் தகவல் என தெரிந்த பின்னர் அது தொடர்பில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்டார்.

இதற்கு பதில் வழங்கிய பூஜித் ஜயசுந்தர கனம் நீதிபதி அவர்களே எவ்வாறான விளக்கமான தகவல்களாக இருந்தாலும், 20 ம் திகதி அனுப்பப்பட்ட குறித்த தகவலில் தெளிவாக ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது கிடைத்துள்ள உளவுத்தகவல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியென் றால், இந்த தகவலை அனுப்பும் போதும் அரச உளவு சேவைக்கு தாக்குதல் ஒன்று இடம்பெறுமென்று உறுதியான நிலைப்பாடு ஒன்று இருக்கவில்லையென்பது புலனாகியது எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் 20 ம் திகதி இந்த உளவுத் தகவலை உங்களுக்கு அனுப்பியதன் பின்னர், உங்களை தொடர்பு கொண்ட நிலந்த ஜயவர்த்தன நாளை அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாமென கூறினார் தானே என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கேள்வி எழுப்பினார்.

ஆம், கதைத்தது உண்மை. அத்தருணத்தில் Tommorw will be dangerous anything will happen என்று குறிப்பிட்டார். இதன்போது இது உங்களுக்கு கிடைத்த தகவலா அல்லது, ஏற்கனவே வெளிவந்த வெளிநாட்டு உளவுப் பிரிவு தகவலா என நான் நிலந்த ஜயவர்த்தனவிடம் கேட்டேன். அதன்போது சேர், இது இதற்கு முன்னர் Foreign intelligence லிருந்தே கிடைக்கப்பெற்றதென நிலந்த குறிப்பிட்டார். இதுதொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நான் நிலந்தவிடம் கேட்டேன். அவர் இது Foreign intelligence லிருந்து கிடைத்த டிவிலொப்மென்ட் தகவல் என்பதை குறிப்பிடவில்லை.

அதாவது அந்த சந்தர்ப்பத்தில் அரச உளவு சேவையிடம் இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு அவர்களிடம் எவ்விதமான உளவுத் தகவலும் இருக்கவில்லை என்பதே புலப்படுகிறது. அதன்காரணமாகவே நான் இது தொடர்பில் நந்தனவிடம் கூறுங்கள் நானும் பார்க்கிறேன் என நிலந்தவிடம் கூறினேன் என பூஜித் ஜயசுந்தர பதிலளித்தார்.

மீண்டும் கேள்வி எழுப்பிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜயசுந்தர அவர்களே நீங்கள், தொடர்ச்சியாக அரச உளவு சேவை சரியான தகவலை வழங்கவில்லை என்று தெரிவித்தீர்கள்;, இந்த ஆணைக்குழுவிற்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்துங்கள், நீங்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றிய காலப்பகுதிக்குள் ஒரு நபர் அல்லது ஒரு குழு இந்த குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இவ்வாறான குற்றத்தை செய்யப்போகிறார்கள் என்பதற்கு எவ்வாறான உறுதிப்படுத்தப்பட்ட உளவுத் தகவல் கிடைத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்.

இல்லை , நீதிபதி அவர்களே அவ்வாறான தகவல்கள் கிடைத்ததில்லைதான். எனினும் சகவாழ்வு குறித்து கதைக்கப்பட்ட காலத்தில் இவ்வாறான தகவல் ஒன்று கிடைத்ததனால் நான் இதனை தீவிரமான ஒரு விடயமாக பார்த்தேன். ஏனைய பிரிவுகளும் அவ்வாறு செய்திருக்கலாம்.

பின்னர் கேள்வி எழுப்பிய மேலதி சொலிசிட்டர் ஜெனரல் இலங்கை பொலிசாரின் பலவீனம் காரணமாகவே இந்த தாக்குதல்; இடம்பெற்றதாக நான் தெரிவித்தால் , நீங்கள் அதற்கு என்ன பதில் கூறுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் இந்த துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் அனேகமானோர் இதற்கு பொலிஸ் மா அதிபர் மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டுமென தெரிவித்தனர். நீங்களும் அதன் காரணமாகவே இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும் நான் இது குறித்து எனக்கு தெரியாதென கூறவில்லை. அப்போது கூறப்போவதும் இல்லை.

எனினும் பொறுப்புக் கூறவேண்டிய ஒரே நபர் நான் அல்ல. பொலிசாரின் பலயீனம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொலிசாருக்கு காணப்பட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொலிஸ் அதிகாரிகள் தமது கடமையினை சரியாக முன்னெடுத்தனர். எனினும் அது இந்த தாக்குதலை தடுப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

ஆனால், இப்படிக் கூறுவதால் நாங்கள் வேண்டுமென்றே எமது கடமைகளை செய்யாமல் விட்டதாக கருத்துப்படாது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதற்கு பல ரகசியக் காரணங்கள் காணப்பட்டன. உதவிய நபர்கள், மறுபக்கம் தாக்கிய விதம் மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளை மறுபக்கம் திருப்பிவிட்ட விதம், அரசியல் நிலவரம், வெளிநாட்டு நிதி கிடைத்தமை ஒற்றர்கள், மறுபக்கம், மாறியமை உள்ளிட்ட இவ்வாறான பல ரகசிய மற்றும் அதிமுக்கிய ரகசியங்கள் பல இதற்கு காரணமாக அமைந்தன.

இன்னும் வெளிப்படுத்தப்படாத ஏராளமான விடயங்கள் உள்ளன. என்னுடைய சாட்சிப் பதிவின் இறுதியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவற்றை நான் கூறுகிறேன். என பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்