யாழில் தனிமைப்படுத்தியவருக்கே கொரோனா -மக்கள் அச்சமடையத்தேவையில்லை -அரச அதிபர் விளக்கம்

43shares

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில் PCR பரிசோதனையில் நடத்துனருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக சமூகத்தொற்று ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் பொதுமக்கள் சுகாதாரத் திணைக்களத்தினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து சமுக இடைவெளியினை பேணி தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் அரசஅதிபர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு