முத்தையா முரளிதரனின் திடீர் முடிவு; விஜய்சேதுபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்

441shares

ஸ்ரீலங்கா கிரிகெட் அணியின் முன்னாள் நட்சத்திர சூழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய்சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னால் தலைசிறந்த கலைஞன் ஒருவர் பாதிப்படைவதை விரும்பவில்லை எனவும் விஜய்சேதுபதியின் எதிர்கால திரைத்துறைப் பயணத்திற்கு தேவையற்ற தடைகளை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

தம்மீதுள்ள தவறான புரிதல் காரணமாக 800 திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதிக்கு சில தரப்பில் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக அறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமக்கு தடைகள் வந்த போதெல்லாம் சோர்ந்துவிடவில்லை எனக் குறிப்பிட்ட முத்தையா முரளிதரன், அனைத்தையும் எதிர்கொண்டே தற்போதைய நிலையை தாம் எட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்கால சந்ததியினருக்கு உத்தேவகத்தை வழக்கும் என்ற நம்பிக்கையிலேயே தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்ததாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தடைகளை கடந்து சுயசரிதை திரைப்படத்தின் படைப்பு, இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் தமக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும், விஜய்சேதுபதியின் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துகொள்வதாக முரளிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

யாழில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞன்

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

மஹர சிறைச்சாலை மோதலில் நால்வர் உயிரிழப்பு -24 பேர் படுகாயம் -தொடரும் துப்பாக்கிசூடு

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்